முக்கிய செய்தி *தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்க செய்திக் குறிப்பு* நமது கோரிக்கை பணிநிரந்தரம் அல்லது முழு நேரப் பணி என்பதாக இருந்தாலும் தற்போதைய முக்கிய தேவையான பணியிட மாறுதலை பெற்றுத் தந்திட நமது சங்கம் சிறப்பு கவனத்துடன் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வந்தது அதற்கான பலனாக இம்மாத இறுதிக்குள் 90% பணியிட மாறுதல் நடைபெறும் தவறினால் அடுத்த மாதத் தொடக்கத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் இதுவரையிலும் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதலுக்கு மாநில திட்ட இயக்குநர் அலுவலகம் ஒப்புதல் அளிக்காது இருந்த நிலையில் தற்போது அதையும் நிறைவேற்றி தருவதாக கூறியுள்ளார்கள். பணியிட மாறுதல் அந்தந்த மாவட்ட CEO மூலமாகவே நடைபெறும்.
Posts
Showing posts from July, 2018
- Get link
- X
- Other Apps

இரங்கல் செய்தி நமது பகுதி நேர ஆசிரியர் சங்கத்தின் முக்கியமான செயல் வீரர் அண்ணன் பழ.கொளதமனின் தவப்பதல்வர் திலீபன் (07/07/2018) அன்று தண்ணீரில் தத்தளித்த தனது நண்பனை காப்பற்றச் சென்று தன் உயிரையும் மாயத்துக்கொண்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம். அன்பு மகனை இழந்து வாடும் அன்பச்சகோதரர் அவர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. பகுதி நேர ஆசிரியர்கள் சார்பாக அன்னாருக்கும் அவர் தம் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்களையும் ஆறுதலயுமா கனத்த இதயத்தோடு தெரிவித்துக்கோள்கிறோம்.