Posts

BREAKING NEWS

Image
#BREAKING NEWS  :* *வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 1,111பேர் மீதான இடைநீக்க நடவடிக்கை ரத்து - பள்ளிக்கல்வித்துறை*

பள்ளிப் பிள்ளைகள் தண்ணீர் குடிக்க அலாரம் அடிக்கும் அரசுப் பள்ளி 

Image
கருங்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களிடம் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து வருகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள கிராமம் கருங்குளம். இங்குள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையில் 647 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். 27 இருபால் ஆசிரியர்களைக் கொண்ட இப்பள்ளியில் அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் என்பவர் பள்ளியின் தலைமையாசிரியராக இருந்து வருகிறார். இவர் தனது பள்ளியின் குழந்தைகளின் படிப்பை மட்டுமல்லாது, உடல்நலத்தையும் கருத்தில் கொண்டு, தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து வருகிறார்.          இதனால் பள்ளி நேரத்தில் மட்டும் தினமும் 2 லிட்டர் அளவு தண்ணீர் பருக வைக்கப்படுவதாக கூறும் தலைமையாசிரியர், இதன் மூலம் தனது பள்ளி மாணவ மாணவியர்கள் சிறுநீரக பிரச்னைகளிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்வை அடையும் நிலை உருவாக்கப்பட்டு வருகிறது என்று கூறுகிறார். தமிழகத்தில் முதன்முறையாக கருங்குளம் அரசுப் பள்ளியில் எடுத்துள்ள இந்த முயற்சியை மற்ற பள்ளிகளும் பின்பற்றினால் வருங்காலத்தில் ...
Image
2019 தமிழக பகுதிநேர ஆசிரியர்கள் முதல் கூட்டம்  *06-01-2019 ஞாயிற்றுக்கிழமை தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க திருச்சி மாவட்ட கூட்டம் நடைபெற்றது.* இந்த ஆண்டின் முதல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி இறுதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கஜா புயல்

Image
டிசம்பர் 1 2018 சனிக்கிழமை கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் பகுதியில் நிவாரண பொருட்களுடன் சென்று உதவினோம். அங்கு நிலைமை மீடியாக்களில் பார்ப்பது போல் இல்லை. வேதாரண்யம் போன்ற முக்கிய ஊர்களில் கூட மின்சாரம் இல்லை, கடைகள் இல்லை. முற்றிலும் சேதாரமான வீடுகள் நிறைய இருக்கின்றன. மீண்டும் செல்ல ஆயத்தமாகின்றோம்.

செய்தி குறிப்பு : திருச்சியில் நடைபெற்ற செயற்குழு கூட்டம்

Image
*தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் செய்தி குறிப்பு.* *தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம்  கடந்த சனிக்கிழமை 4.8.18 திருச்சியில் நடைபெற்றது.திருச்சி மாவட்ட தலைவர் திரு சுரேஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.* *திருப்பூர் பழ.கவுதமன் அவர்களின் மகன் திலீபன் மற்றும் விழுப்புரம் ஆனந்தன் அவர்களின் சகோதரி அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.* *தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கு நடத்தும் பட்சத்தில்  மனித உரிமை ஆணையம் (Human Right Commission) துறையிடம் முறையிட்டு அதனடிப்படையில் ஆலோசனை பெற்று வழக்கு தொடர்வது என்றும்..* *வரும் செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் போராட்டம் நடத்துவது என்றும்...* *திரு.கவுதமன் அவர்களின் பதவி விலகளை மீண்டும் பரிசீலனை செய்து கடைசி முயற்சியாக கரூர் மாவட்ட தலைவர் திரு.ரமேஷ் அவர்கள் தொலைபேசி வாயிலாக திரு.கவுதமனிடம் உறுதி படுத்திய பின்பு அவரது  (சங்கப் பொருப்பில் இருந்து) விலகல் ஏற்றுக் கொள்ள பட்டது.* *செய்தி தொடர்பாளர் திரு.சுதாகர் நன்றியுரை நிகழ்த்தின...
முக்கிய செய்தி    *தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்க செய்திக் குறிப்பு* நமது கோரிக்கை பணிநிரந்தரம் அல்லது முழு நேரப் பணி என்பதாக இருந்தாலும் தற்போதைய முக்கிய தேவையான பணியிட மாறுதலை பெற்றுத் தந்திட நமது சங்கம் சிறப்பு கவனத்துடன் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வந்தது அதற்கான பலனாக இம்மாத இறுதிக்குள் 90% பணியிட மாறுதல் நடைபெறும் தவறினால் அடுத்த மாதத் தொடக்கத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் இதுவரையிலும் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதலுக்கு மாநில திட்ட இயக்குநர் அலுவலகம் ஒப்புதல் அளிக்காது இருந்த நிலையில் தற்போது அதையும் நிறைவேற்றி தருவதாக கூறியுள்ளார்கள். பணியிட மாறுதல் அந்தந்த மாவட்ட CEO மூலமாகவே நடைபெறும்.
Image
இரங்கல் செய்தி நமது பகுதி நேர ஆசிரியர் சங்கத்தின் முக்கியமான செயல் வீரர் அண்ணன் பழ.கொளதமனின் தவப்பதல்வர் திலீபன் (07/07/2018) அன்று  தண்ணீரில் தத்தளித்த தனது நண்பனை காப்பற்றச் சென்று தன் உயிரையும்  மாயத்துக்கொண்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம். அன்பு மகனை இழந்து வாடும் அன்பச்சகோதரர் அவர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை.   பகுதி நேர ஆசிரியர்கள் சார்பாக அன்னாருக்கும் அவர் தம் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்களையும் ஆறுதலயுமா கனத்த இதயத்தோடு தெரிவித்துக்கோள்கிறோம்.